ஜம்மு பள்ளிகளில் பஜனை பாடல்களை பாடுவது தவறில்லை: மெகபூபாவுக்கு பரூக் பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, கடந்த 19ம்  தேதி தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதில், ஜம்மு பள்ளியில் மாணவர்கள், தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பஜனை பாடலான, ‘ரகுபதி ராகவ ராஜாராம்...’ பாடலை ஆசிரியர்கள் முன்னிலையில் பாடுகின்றனர். ‘மத அறிஞர்களை சிறையில் அடைப்பது, ஜமா மசூதியை மூடுவது, பள்ளி குழந்தைகளை இந்து பஜனைகளை பாடச் செய்வது ஆகியவை மூலம், காஷ்மீரில் இந்திய அரசு இந்துத்துவா கொள்கையை அமல்படுத்துகிறது,’ என்று குற்றம்சாட்டி இருந்தார். மெகபூபாவின் இந்த கருத்தில் இருந்து தேசிய மாநாடு கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா வேறுபட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று கூறுகையில், ‘இருதேச கோட்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்தியா வகுப்புவாதமற்றது, மதசார்பற்றது. நான் பஜனை பாடுகிறேன். நான் பஜனை பாடுவது என்பது தவறா? அஜ்மீர் தர்காவை இந்துக்கள் பார்வையிட்டால் அவர்கள் முஸ்லிமாக மாறுகிறார்கள் என்று அர்த்தமா? என்று கேட்டுள்ளார்.

Related Stories: