தெலுங்கானாவில் 1 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை: அசத்தும் தனியார் மருத்துவமனைக்கு குவியும் பாராட்டு!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் 1 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் சாதாரண காய்ச்சல் போன்ற சிறு நோய்களுக்கு கூட பல தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கில் நோயாளிகளிடம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ராம்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளிடம் 1 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எக்ஸ்-ரே, பிசியோதரபி, ஐசியூ உள்ளிட்டவையும் குறைந்த செலவிலேயே செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமும் குறைந்தது 200 பேர் வரை இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நோயாளிகளுக்கும் அவர்களுடன் வருபவர்களுக்கும் இலவச உணவும் அளிக்கப்படுகிறது. அனைவர்க்கும் மருத்துவ சேவை என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்கியிருப்பதாக மருத்துவமனை நடத்தி வரும் அறக்கட்டளை தலைவர் கங்காதர குப்தா தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற மருத்துவமனைகளை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: