×

ஹர்திக் அதிரடி வீண்; ஆஸி.க்கு முதல் வெற்றி: கிரீன் அமர்க்களம்

மொகாலி: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மொகாலியில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. ராகுல், கேப்டன் ரோகித் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 11 ரன் எடுத்து ஹேஸல்வுட் வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த கோஹ்லி 2 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்தியா 35 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ராகுல் - சூரியகுமார் ஜோடி அதிரடியாக 68 ரன் சேர்த்தது. 32 பந்தில் அரை சதம் அடித்த ராகுல் 55 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஹேசல்வுட் பந்துவீச்சில் எல்லிஸ் வசம் பிடிபட்டார். சூரியகுமார் 46 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கிரீன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் ஹர்திக் ருத்ரதாண்டவமாட, அக்சர் மற்றும் கார்த்திக் தலா 6 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஹர்திக் 25 பந்தில் அரை சதம் அடித்ததுடன், கிரீன் வீசிய கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளையும் சிச்சருக்கு தூக்கி அசத்தினார். இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. ஹர்திக் 71 ரன் (30 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ஹர்ஷல் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் எல்லிஸ் 3, ஹேசல்வுட் 2, கிரீன் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கேப்டன் பிஞ்ச் 22 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), கிரீன் 61 ரன் (30 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அக்சர் சுழலில் ஆட்டமிழந்தனர். ஸ்மித் 35(24 பந்து) ரன் எடுத்தார். மேத்யூ வாடே 45 ரன், கம்மின்ஸ் 4 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அக்சர் 3 விக்கெட், உமேஷ் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி நாக்பூரில் நாளை மறுநாள் நடக்கிறது.

Tags : Aussie ,Green Amargulam , Hardik's action is futile; First win for Aussies: Green seat
× RELATED நமீபியாவுக்கு எதிராக ‘பவர் பிளே’ வெற்றி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா