சென்னை: நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அவரும், மஞ்சிமா மோகனும் இணைந்து ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தனர். அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதுபற்றி செய்திகள் வெளியானபோது, அதை இருவருமே மறுக்கவில்லை. இந்நிலையில், தேனியில் கவுதம் கார்த்திக்கின் நண்பர் ஒருவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதற்கு கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் ஜோடியாக வந்திருந்தனர். இதன்மூலம் அவர்களின் காதல் உறுதியாகியுள்ளது. ஊட்டியில் இருக்கும் கார்த்திக்கின் பண்ணை வீட்டில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறும் என்று தகவல் பரவியுள்ளது. ஏற்கனவே இரு குடும்பத்தாரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.