தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக். 1 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்டோபர் 1 முதல் 10 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் மற்றும் கோவையில் இருந்து தினமும் அக்டோபர் 5 வரை பேருந்துகள் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தசரா பண்டிகை முடிந்து ஊர் திரும்பிட ஏதுவாக அக்டோபர் 6 முதல் 10 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: