×

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 75-வது ஆண்டு சுதந்திர அமுத பெருவிழா: ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 75-வது ஆண்டு சுதந்திர அமுத பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், ஒன்றிய தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுனர்.

கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மீது பிரதமர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி. தாய் மொழியில் பயின்றால் தான் அறிவை வளர்க்க முடியும். தாய் மொழி கல்வி தான் அதிக பலன் தரும். தமிழகத்தை சோழ மன்னர்கள் ஆண்டபோது பொறியியல் படிப்பு இல்லை. கட்டிட வியல் பயிலாமல் பல கட்டிடங்கள், கோவில்களை தமிழர்கள் கட்டினர். இதற்கெல்லாம் காரணம் அவர்களிடம் இருந்த ஆளுமை, சிறந்த படைப்பு திறன் தான் என்றும் பிரதமரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தமிழ் மொழிக்காக பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று  விழாவில் ஒன்றிய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.

தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய குறிப்புகள் தகவல் ஒளிப்பரப்பு துறை மூலம் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சுயசார்பு பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். இதுபோன்ற சுயசார்பை தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் சுதந்திர போராட்ட காலத்திலேயே செய்து காட்டினார். 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்ற மோடியின் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நனவாக்குவோம் என்று ஒன்றிய  இணை மந்திரி முருகன் கூறியுள்ளார்.


Tags : 75th Annual Freedom Amutha Festival ,Gandhikirama University of Dintugul , 75th Independence Elixir Celebration, Gandhigram University, Dindigul, Union Ministers participate
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ