×

பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள புதர்களில் ஜப்பானின் அரியவகை சிலந்தி பூச்சி

திருத்தணி: பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள புதர்களிலிருந்த ஜப்பானிய நாட்டின் அரியவகை சிலந்தியை வைல்டு லைஃப் போட்டோகிராபர் கண்டுபிடித்து அதனை வெளியிட்டதால் பாராட்டு குவிந்து வருகின்றது. ஆந்திரா மாநிலம் திருப்பதியை  சேர்ந்தவர் பிரபல வைல்டு லைஃப் போட்டோகிராபர் இனேஷ் சித்தார்த்தா (25).  இவர் திருத்தணியில் வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு அரிய வகையான பூச்சிகளை கண்டறிந்து அதை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்,  திருத்தணி அருகே உள்ள கார்த்திகேயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  அரிய வகை வண்ணத்துப்பூச்சி ஒன்றை கண்டறிந்தார். அதனை படம் பிடித்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.

அதேபோன்று, மத்தூர் காட்டுப்பகுதியில் ஒன்றும் கண்டறிந்தார் அது காமன் கிரின் கர்னலைக் என்ற அரிய வகை பூச்சி இனத்தை சேர்ந்தாகும். இதனை தொடர்ந்து  திருத்தணி வனத்துறையிடம்  ஒப்படைத்தார். அரிய வகையான சிலந்தி  பூச்சி ஜப்பானில் மட்டுமே உள்ளது.  அந்த வகை பூச்சியையும் திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள புதர்களில் மறைந்திருப்பதை கண்டறிந்தார்.

கடந்த வாரம்  அந்த அரிய வகை சிலந்தி (எட்டுகால்) பூச்சி. இதற்கு  சைலர் கோலிங்வுடி  இந்த பூச்சியின் ரகத்தையும் குறித்து படம்பிடித்து அதையும், வெளியிட்டுள்ளார். இந்த சிலந்தியின் முதுகு பகுதி ஸ்கை புளுவாகவும், கால் பகுதி பச்சை நிறமாகவும் மற்றும் உடலின் மத்திய பகுதி கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறது. இந்த அரிய வகை உயிரினத்தை கண்டுபிடித்து காட்டிய   வைல்டு லைஃப் போட்டோகிராபர் இனேஷ் சித்தார்த்துக்கு பொதுமக்களின் பாராட்டு குவிந்து வருகின்றது.

*கார்த்திகேயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  அரிய வகை வண்ணத்துப்பூச்சி ஒன்றை கண்டறிந்தார்.

Tags : A rare Japanese spider mite in the bushes at the old district office
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...