முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தயாரிப்பாளர் சங்கத்தினர் சந்திப்பு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அரசு வழங்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கான மானியத் தொகையையும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளையும், பையனூரில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்கு மாடி வீடுகட்ட உதவியும், சங்க அலுவலகத்திற்கு சொந்த இடம் வழங்கக்கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் சங்கத் தலைவர் என்.ராமசாமி நேற்று வழங்கினார் அப்போது, அமைச்சர் கே.என்.நேரு, சங்க செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் எஸ்.கதிரேசன் பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், தயாரிப்பாளர் கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: