×

பெரம்பலூர் மாவட்டத்தில் 70 கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களில் மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்-விரக்தியில் விவசாயிகள்

பெரம்பலூர் : 2018, 2019ம் ஆண்டுகளைப் போல பெரம்பலூர் மாவட்ட த்தில் 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட் டுள்ள மக்காச்சோள பயிர்க ளில் மீண்டும்அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் விரக்தியில் விவசாயிகள் உள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி சாகுபடியை பெரி தும் நம்பியுள்ள பூமியாகும்.இங்கு மக்காச்சோளம், பரு த்தி, சின்னவெங்காய பயி ர்களின்சாகுபடி அதிகம்செ ய்துவருவதால் தமிழகஅள வில் தொடர்ந்து 15ஆண்டு களுக்கும் மேலாக முதலிட த்தை வகித்து வருகிறது.

குறிப்பாக மக்காச்சோளம் மட்டுமே கடந்த 5ஆண்டுக ளாக 2லட்சம் ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டு வருகிறது பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி பயிரான மக்கா ச்சோளம் நடப்பாண்டு 85 ஆயிரம் ஹெக்டேரில் அதா வது 2,09,950 ஏக்கர் பரப்பள வில் சாகுபடி செய்யப்பட்டு ள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2018, 2019ம் ஆண்டுகளில் மக்காச்சோள விவசாயிக ளுக்கு அமெரிக்கன் படைப் புழு தாக்குதல் பெரும் அச்சு றுத்தலாக இருந்துவந்தது.

வேளாண்மை துறை பல் வேறு பயிர்ப்பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொ ண்டபோதிலும், கடந்த 2018 ஆம் ஆண்டில் 2.2இலட்சம் ஏக்கரில் படைப்புழு தாக்கி யது.இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மக்காச்சோ ள விவசாயிகள் கலெக்டர் அலுவலகம்முன்பு திரண்டு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சார்பாக புகா ர்மனுக்களை அப்போது அ ளித்ததால் தமிழக அரசிடம் இருந்து பாதிக்கப்பட்ட அ னைத்து விவசாயிகளுக்கு ம் இழப்பீட்டுத்தொகை பெ ற்றுத் தரப்பட்டது.

அதேபோல் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் வழ க்கத்தைவிட அதிகம் கொட் டித் தீர்த்த தென்மேற்கு பரு வமழை, சராசரிக்கு இணை யாகபெய்த வடகிழக்கு பரு வ மழை, இவற்றோடு போ ட்டி போட்டுக்கொண்டு நிவ ர் புயல், புரெவி புயல் என 2 புயல்களின் எதிர்பாராதத் தாக்குதல் நடத்தியதால் பெரும்பாலான மக்காச்சோ ள பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021 ஜனவரி மாதத் தில் எதிர்பாராமல் பெய்த தொடர் மழை காரணமாக மக்காச்சோள கதிர்கள் முற்றி, அறுவடைக்கு முன்பாக, பயிர்களிலேயே பரிதாபமாக முளைக்கத் தொடங்கின. இதனால் பெரம்பலூர் மாவ ட்ட மக்காச்சோள விவசாயி கள் பெரும் நஷ்டம் அடைந்தனர்.

2018,19ஆண்டுகளில் அமெ ரிக்கன் படைப்புழுத் தாக்கு தல், 2021ல் கன மழையால் பாதிப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாதிக்கப்ப ட்ட மக்காச்சோள விவசாயி கள், தற்போது 2022ஆம் ஆ ண்டில் மீண்டும்அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 45நாட்களுக்குள்ளாக இளஞ்செடிகளிலேயே புழுக்கள் குடியேறி தண்டுகளையும் தோகைகளையும் மக்காச்சோளகுருத்துகளையும் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

இதற்காக குமு றும் விவசாயிகளிடம் வே ளாண்மைத்துறை அலுவல ர்கள் மேலோட்டமாகத் தெரி விப்பது என்னவென்றால், படைப் புழு தாக்குதல் அதி கமாக காணப்பட்டால், வேம் பு சார்ந்த தாவரப் பூச்சிக் கொல்லியான அசாடிராக் டின் அல்லது 5சத வேப்பங் கொட்டை கரைசல் தெளித் தல், இளம் புழு பருவத்தில் மெட்டாரைசியம் அனிசோபிலே அல்லது பவேரியா பாசியானா என்ற உயிரி பூச்சிக்கொல்லியும், வளர்ச்சி அடைந்தபுழுக்களை கட் டுப்படுத்துவதற்கு பரிந்து ரை க்கப்பட்ட இரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒ ன்றையும் பயன்படுத்தலா ம். இது தொடர்பாக, துறை பரிந்துரைக்காத இரசாயன பூச்சி மருந்துகளை கண்டி ப்பாக விவசாயிகள் பயன்ப டுத்தக்கூடாது எனத் தெரி விக்கின்றனர்.

கடந்த 2019 ஆம்ஆண்டு மேனுவல் ஸ்பி ரேயர் மூலம் மருந்து தெளி த்த விவசாயிகள்சிலர் காற் றுமூலம் விஷம்தாக்கி உயி ரிழந்தனர். இதனால் ட்ரோ ன் ஸ்பிரேயர்மூலம் அரசின் சார்பாக தமிழ்நாடு வேளா ண் பல்கலைக்கழக ஆலோ சனையுடன் வயல்களில் ஒட்டுமொத்தமாக மருந்து தெளிக்கப்பட்டது குறிப்பி டத் தக்கது.இது குறித்துத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செ யலாளர் ஏ.கே.இராஜேந்தி ரன் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டத் தில் கடந்த 2018,19ம் ஆண்டுகளில் மக்காச்சோளம், பருத்தி வயல்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காணப்பட்டு, பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு தமிழக அரசுக்கு பரி ந்துரைக்கப்பட்டு இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. இந்த முறை விவசாயிகளை போ ராடங்களைத் தொடங்கும் முன்பாக வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, புள் ளியியல்துறை ஆகியவற்றின் மூலம் வயல்களில் கூட்டாய்வு மேற்கொள்ளச் செய்து பாதிப்பு விபரங்களை மதிப்பீடுசெய்து அரசுக்குப் பரிந்துரைத்து இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத்த ரவேண்டும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு வி வசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சக்திவேல் தெரிவித்ததாவது: பெரம் பலூர் மாவட்டத்தில் வெப் பச்சலனங்களால் பெய்கி ற மழையால் மீண்டும் படை ப்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. ஆலத் தூர் தாலுக்காவில் சில்லக் குடி, கொளத்தூர், காரை, சிறுகண்பூர், அயனாவரம், கொட்டரை உள்ளிட்ட 20க்கு ம் மேற்பட்ட கிராமங்களில், குன்னம் தாலுக்காவில் துங்கபுரம், கோவில்பாளையம், காரைப்பாடி, வயலப் பாடி உள்ளிட்ட 20க்கும்மேற் பட்ட கிராமங்களிலும், வேப்பந்தட்டை தாலுக்காவில் திருவாளந்துறை, பசும்பலூர், வி.களத்தூர், நெய்குப்பை, கள்ளப்பட்டி, கடம்பூர், வெண்பாவூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்க ளிலும், பெரம்பலூர் தாலுக்காவில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் என 70க் கும் மேற்பட்ட கிராமங்களில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இதற்காக பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு இலவசமாக மருந்து களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags : Perambalur district ,Maize , Perambalur: As in 2018 and 2019, the maize crops cultivated in more than 70 villages in Perambalur district
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...