×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதான திட்டத்துக்கு ரூ.1.11 கோடி நன்கொடை வழங்கினார் முகேஷ் அம்பானி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதான திட்டத்துக்கு முகேஷ் அம்பானி ரூ.1.11 கோடி நன்கொடையாக வழங்கினார். ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி அன்னதான திட்டத்துக்கு ரூ.1.11 கோடி நன்கொடை அளித்தார்.

உலகின் முன்னணி தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினர் மற்றும் வருங்கால மருமகள் ராதிகாவுடன் திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருமலையில் தரிசனம் செய்த பிறகு ரங்கநாயகுலா மண்டபத்தில் வேத பண்டிதர்கள் முகேஷ் அம்பானிக்கு வேதம் மந்திரம் முழங்க ஆசி வழங்கினர்.

திருமலையில் தரிசனம் செய்த பிறகு முகேஷ் அம்பானி செய்தியாளர்களிடம் பேசுகையில்; ஏழுமலையான் அருள் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் கோவிலில் நாளுக்கு நாள் சிறப்பான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் இந்திய மக்களின் பெருமைமிகு சின்னமாக திருப்பதி கோவில் உள்ளது எனவும் கூறினார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதான திட்டத்துக்கு ரூ.1.11 கோடி நன்கொடையை முகேஷ் அம்பானி வழங்கினார்.

Tags : Mukesh Ambani ,Tirupati Esummalayan temple , Mukesh Ambani donates Rs 1.11 crore for charity project at Tirupati Esummalayan Temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!