×

சீவலப்பேரி அருகே சாலையோரத்தில் அபாய கல்வெட்டான்குழி: தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?

நெல்லை:  கங்கைகொண்டானில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் பதினாலாம்பேரி கிராம பகுதியில் சாலையோரம் கல்வெட்டான்குழி ஒன்று உள்ளது. கல் குவாரிக்காக தோண்டப்பட்ட இந்த பகுதி மூடப்படாமல் உள்ளது. இதில் எப்போதும் நீர் நிறைந்து உள்ளது. இந்த கல்வெட்டான்குழி சாலையோரம் உள்ளதால் அபாய நிலையில் உள்ளது. இரவில் இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால் இவ்வழியாக செல்வோர் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை நிலவுகிறது.

எனவே இந்த கல்வெட்டான்குழி இருக்கும் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதுடன் இரவில் ஒளிரக்கூடிய போக்குவரத்து பாதுகாப்பு ரிப்ளர்க்டர்களை ஒட்டிவைக்கவும், கல்வெட்டான்குழி இருப்பதை அறிவிக்கும் வகையில் எச்சரிக்கை பலகையும் வைக்கவேண்டும் என இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Sivalapperi , Roadside danger pothole near Sivalapperi: Will retaining wall be erected?
× RELATED பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்