×

உல்லாசத்துக்கு எதிர்ப்பு... செல்போனில் பேச மறுப்பு... க.காதலியின் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு கள்ளக்காதலன் தற்கொலை: கொருக்குப்பேட்டையில் அதிர்ச்சி

தண்டையார்பேட்டை: கள்ளக்காதலியின் இரண்டு குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு கள்ளக்காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். உல்லாசத்துக்கு வர மறுத்த காரணத்தாலும் செல்போனில் பேச மறுப்பு தெரிவித்ததாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் ரசூல். இவர்களுக்கு ஸ்டீபன் (9), ஆல்பர்ட் (7) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கவிதாவின் நடவடிக்கையில் ரசூலுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளார்.

இருப்பினும் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்படாததால் மனைவியை விட்டு ரசூல் பிரிந்து தனியாக வசித்துவந்ததாக தெரிகிறது. இதன்பிறகு கவிதா, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்துள்ளார். இந்த நிலையில், சென்னை செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ராஜேஷ் (35) என்பவருடன் கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து தங்கியிருந்து  சென்றுள்ளார். மேலும் அடிக்கடி செல்போனில் ராஜேசுடன் பேசிவந்துள்ளார்.

இந்தநிலையில், கருத்துவேறுபாடு காரணமாக ராஜேசுடன் பேசுவதை கவிதா தவிர்த்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் ராஜேஷ் அழைக்கும்போது அவருடன் செல்ல கவிதா மறுத்துவிட்டதாக தெரிகிறது. இது ராஜேசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘’ஆரம்பத்தில் ஒழுங்காக வந்தவர் தற்போது ஏன் முரண்டுபிடிக்கிறார்’ என்று நினைத்து கவிதா மீது மேலும் ஆத்திரம் அடைந்து அவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு கவிதா வீட்டுக்கு ராஜேஷ் சென்றுள்ளார். பின்னர் கவிதாவுடன் அவர் கடும் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

பின்னர் தான் ஏற்கனவே தயாராக விஷம் கலந்துவைத்திருந்த குளிர்பானத்தை கவிதாவின் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அவர்கள் வாங்கி குடித்தபிறகு அந்த குளிர்பானத்தில் பாதியை ராஜேசும் குடித்துள்ளார். இதன்பிறகு சிறிது நேரத்தில் குழந்தைகளும் ராஜேசும் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் கவிதா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆர்கே.நகர் போலீசார் சென்று ராஜேஷ், குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குழந்தைகள் ஸ்டீபன், ஆல்பர்ட் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்கே. நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ‘கள்ளக்காதலி கவிதாவுக்கு விஷம் கொடுக்காமல் அவரது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு ராஜேஷ் ஏன் தற்கொலை செய்யவேண்டும். தனியாக கவிதா தவிக்க வேண்டும் என்று நினைத்து பழிவாங்கினாரா’’ என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு கள்ளக்காதலன் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
சென்ைன வண்ணாரப்பேட்டை பேரம்பாள் செட்டி தெருவை சேர்ந்தவர் மணி (41). இவர் இரும்பு வியாபாரி. இவரின் மனைவி துலுக்காணம் (38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி தெரியவந்ததும் மனைவியை கண்டித்துள்ளார். இந்தநிலையில், நேற்று வீட்டைவிட்டு துலுக்காணம் சென்றுவிட்டார். பல இடங்களில் தேடியபோது அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசில் மணி கொடுத்த புகாரில்,“என் மனைவியை காணவில்லை. எனவே, அவரை மைக்கேல் என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம். அவரது பிடியில் இருந்து மனைவியை மீட்டு தர போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : K. Kathali ,Korukupettai , Objection to entertainment... Refusal to talk on cell phone... Swindler commits suicide after poisoning K. Kathali's 2 children: Shock in Korukupettai
× RELATED பைக் மீது பஸ் மோதி தலை நசுங்கி வாலிபர் பலி