×

பழங்குடியின தகுதி நரிக்குறவர்களுக்கு கல்வி, வேலையில் சமூக நீதி பெற்று தரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: தமிழக அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக  பழங்குடியின தகுதி வழங்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் “நரிக்குறவர் உள்ளிட்ட மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்” என்று சொல்லியிருந்தோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த மார்ச் 19ம் தேதி  பிரதமருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினேன். அதில் “1965ல் லோகூர் குழுவும்” “1967ல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவும்”, பிறகு தமிழ்நாடு அரசும், “2013ல் ஒன்றிய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டிருந்ததையும்” சுட்டிக்காட்டி, “விரைவில் குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர் மக்களுக்கு” பழங்குடியினர் தகுதி அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

இதைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாகக் கோரிக்கை எழுப்பி வந்தனர். இதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திமுகவின் தொடர் முயற்சிகளின் விளைவாக கழகத்தின் முப்பெரும் விழா விருதுநகரில் நடைபெறுகின்ற இந்த வேளையில் இந்த மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியின தகுதி மட்டுமின்றி எனது தலைமையிலான அரசு அமைந்த பிறகு அவர்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர்களின் வாழ்விடங்களுக்குப் பட்டா வழங்குவது, அடிப்படை வசதிகள் வழங்குவது, தொழில் துவங்க உதவுவது என ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நானே அவர்கள் வசிக்கும் பூஞ்சேரி கிராமத்திற்குச் சென்று அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மட்டுமின்றி- குடும்ப அட்டை போன்ற அடிப்படை உரிமைகளை அளித்து- அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கான உத்தரவாத திட்டத்தைத் துவக்கி வைத்து, ரூ.4.53 கோடிக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். சமூகநீதிக்காக - சமுதாயத்தை கை தூக்கி நிறுத்துவதற்காக அடுத்தடுத்து பொருளாதார உதவி நடவடிக்கைகளைத் திமுக அரசு எடுத்து வருகின்ற நேரத்தில் - அவர்களுக்கு பழங்குடியின தகுதி வழங்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை - நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும். நரிக்குறவர் இன மக்களின் வாழ்வினை ஒளிமயமாக்க எனது தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து அடுத்தடுத்து சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* ஐரோப்பிய யூனியனிலும் ரூ.31,600 கோடி அபராதம்
ஆன்ட்ராய்டு செல்போன்கள், டேப்லெட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் ஒடுக்கும் வகையில், வர்த்தக சந்தையில் கூகுள் சட்ட விரோதமாக ஆதிக்கம் செலுத்துவதாக, கடந்த 2018ம் ஆண்டு அதன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை விசாரித்த ஐரோப்பிய  ஆணையம், கூகுளுக்கு  அபராதம் விதித்தது. இதை எதிர்த்து கூகுள் ஐரோப்பிய யூனியனின் தலைமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இதை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட  அபராதத்தில் சிறிது குறைத்து ரூ.31,600 கோடி செலுத்தும்படி நேற்று உத்தரவிட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K.Stal , Education, employment and social justice for tribals with disabilities: Chief Minister M.K.Stal's welcome
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...