×

சுகாதாரத்துறையில் 3 ஷிப்ட் பணி: தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை உழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அனைத்து ஊழியர் மற்றும் சுகாதாரப் பணியாளர் சங்கம், அடித்தளப் பணியாளர்களின் பணி நேரத்தினை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்து ஆணையிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், டி பிரிவு ஊழியர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணி வரையும், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையும் 3 ஷிப்ட் அடிப்படையில் சுழற்சி முறையில் பணி வழங்கலாம். அதில் முதல் ஷிப்டில் 50 சதவீதம் பேர், 25 சதவீதம் பேர் 2வது ஷிப்டிலும், 25 சதவீதம் பேர் 3வது சுழற்சியிலும் பணியமர்த்தலாம். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government , 3 shift work in health department: Tamil Nadu government has issued an ordinance
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு