×

வனப்பகுதியில் இரண்டு பாறைகளுக்கு இடையே 300 அடி உயரத்தில் நிர்வாணமாக அழுது கொண்டிருந்தவர் மீட்பு; பிரேசில் ராணுவம் அதிரடி

பிரேசிலியா: வனப்பகுதியில் 300 அடி உயரத்தில் 2 பாறைகளுக்கு இடையே நிர்வாண நிலையில் இருந்தவரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். பிரேசில் நாட்டின் மெஸ்ட்ரி அல்வேரோ வனகாப்பகத்தில் சுற்றித் திரிந்த ஒருவர், உயரமான இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே உள்ள குறுகிய சந்தில் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து அழுது கொண்டு கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். கிட்டதட்ட 300 அடி உயரத்தில் இருந்த பாறையின் இடையே அவர் நின்றிருந்த தகவல் பிரேசில் அரசுக்கு தெரியவந்தது. அதையடுத்து பிரேசிலிய விமானப்படையின் மேஜர் பாப்லோ ஏஞ்சலி மார்க்வெஸ் தலைமையிலான படையினர், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்த அந்த நபரை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘நிர்வாணமாக பாறையின் இடுக்கில் நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், அங்கிருந்து கீழே விழும்படியான ஆபத்தான நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடலில் காயங்களுடன் இருந்த அந்த நிர்வாண மனிதனை மீட்டோம். விசாரணையில் அந்த நபர் அதேபகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் எதற்காக 300 அடி உயரத்திற்கு சென்று நிர்வாண நிலையில் நின்றிருந்தார் என்பது அவருக்கு தெரியவில்லை என்று கூறுகிறார். ஆனால், அவர் அவரது நண்பர்களுடன் அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்றனர்.

Tags : Rescue of crying man naked 300 feet between two rocks in forest; Brazilian army in action
× RELATED புதிய தடுப்பூசிகள் அதிகம்...