×

ஜும்மா மசூதியில் 200 உலமாக்களுக்கு ரூ.10.31 லட்சத்தில் மிதிவண்டி

சென்னை: ஜும்மா மசூதியில் 200 உலமாக்களுக்கு ரூ.10,31,240 லட்சம் மதிப்பில் மிதிவண்டிகளை அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மா.சுப்பிரமணியன் வழங்கினர். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டத்தில் இயங்கும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு, அரசின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று மயிலாப்பூர், கச்சேரி ரோட்டில் உள்ள ஜும்மா மசூதியில் சுமார் 200 உலமாக்களுக்கு ரூ.10,31,340 மதிப்பில் மிதிவண்டிகள் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்  தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, சென்னை மாமன்ற 125வது வார்டு உறுப்பினர் ரேவதி, வக்பு வாரிய தலைவர் அப்துல்ரஹமான், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ் குமார் மற்றும் சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Jumma Masjid , Bicycle for 200 Ulama at Jumma Masjid at Rs.10.31 Lakhs
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை,...