×

7-வது சர்வதேச யோகா தினம்: நாளை நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி

டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், 7-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார். அதோடு, மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சாா்பில் நேரலையில் யோகா பயிற்சிகளும் செய்து காட்டப்பட உள்ளன. 
உடல்நலனுக்கு யோகா என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கடைப்படிக்கப்படுகிறது. இதில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் உரையாற்ற உள்ளார். உடல் நலத்திற்கான யோகா என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான யோகா டிரில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. யோகா குருக்களான பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும் சுமார் ஆயிரம் நிறுவனங்களில் யோகா பயிற்சி அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post 7-வது சர்வதேச யோகா தினம்: நாளை நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : 7th International Day of Yoga ,PM Modi ,Delhi ,Ministry of AYUSH ,Modi ,International Yoga Day ,PM ,Dinakaran ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...