×

அர்ஜெண்டினாவில் களைகட்டும் உலகக்கோப்பை டாங்கோ நடனபோட்டி: உலகின் பல நாடுகளை சேர்ந்த 500 போட்டியாளர்கள் பங்கேற்பு

பியூனஸ் அயர்ஸ்: உலகக்கோப்பை டாங்கோ நடனப் போட்டி அர்ஜெண்டினாவில் களைகட்ட தொடங்கியுள்ளது. அர்ஜெண்டினாவின் பாரம்பரியமிக்க டாங்கோ நடனப்போட்டிக்கான தகுதி சுற்றுகள் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் களைகட்ட தொடங்கி விட்டது. கொரோனா பரவல் காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் நடைபெற்று வந்த டாங்கோ நடனப் போட்டி நடப்பாண்டில் பார்வையாளர்கள் புடைசூழ நேரடியாக நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். சலூன் ஸ்டைல் மற்றும் ஸ்டேஜ் ஸ்டைல் என இரு பிரிவுகளில் போட்டி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு போட்டியில் பார்வையாளர்களை உற்சாகமூட்டும் வகையில் இசை நிகழ்ச்சிகளுக்கும், கண்காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலகக்கோப்பை டாங்கோ நடனம் போட்டியின் இறுதி சுற்று வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. 


Tags : Argentina , Argentina, World Cup, Tango Dance, Competitor
× RELATED அர்ஜெண்டினாவில்...