×

முதுநிலை பட்டதாரிகளுக்கான தகுதிப்பட்டியல் வெளியீடு

சென்னை: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணி நியமனத்துக்காக புவியியல், வரலாறு, இயற்பியல் பாட ஆசிரியர் பணி நியமனத்துக்கு தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களில் நேரடி  பணி  நியமனம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மேற்கண்ட பதவிகளுக்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் ஜூலை 4ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, 17  பாடங்களுக்கு கடந்த மாதம் 27ம் தேதி சான்று சரிப்பார்ப்பு இம்மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடந்தது. அதன் அடிப்படையில், இனச்சுழற்சி அடிப்படையில், புவியியல், வரலாறு, இயற்பியல் பாடங்களுக்கு தகுதியுள்ளவர்களுக்கான  தற்காலிக தெரிவுப் பட்டியல்கள் முதற்கட்டமாக   ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணை தளத்தில் இருந்து ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம்.


Tags : Masters Graduates , Release of Merit List for Masters Graduates
× RELATED துப்புரவு பணியாளர் பணிக்கான...