×

திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

*புலிகளை கண்காணிக்க திட்டம்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் 2000 வது ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 1,500 ஆக இருந்தது. இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2019 ஆண்டு கணக்கின் படி 27 சதவீதமாக இருந்தது.


இதனை இரட்டிபாக்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் புலிகளின் பாதுகாப்பை அதிகபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கின்றன. இதனால் புலியை கொடிக்கப்பல் இந்நிலையில் இந்த புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து 3000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உலகில் அதிக புலிகள் உள்ள நாடு இந்தியா என்ற பெருமையும் உள்ளது.

திருவில்லிபுத்தூரை தலைமை இடமாகக் கொண்டு திருவில்லிபுத்தூர் மற்றும் மேகமலை புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. முதலில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக இருந்தது. பின்னர் புலிகள் கணிசமாக இந்த பகுதியில் வசித்து வருவதால், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் காப்பகம் என்பதால் இந்த காப்பக வனப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புலிகளின் எண்ணிக்கையை கணக்கிடவும், புலிகளின் பாதுகாப்பை கருதியும் வனப்பகுதியில் ஆங்காங்கே கேமராக்கள் பொறுத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த கேமராக்கள் மூலம் புலிகள்ந நடமாட்டம் மட்டுமின்றி மற்ற வன விலங்குகளின் நடமாட்டத்தையும் வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கேமரா பொருத்தப்பட்டதன் மூலம் ஏராளமான வனவிலங்குகள் கேமராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியிலும் ஏராளமான வன விலங்குகள் சுற்றி வருவதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வன விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் வனப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாடத்தை தடுக்கவும் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் தங்களுடைய கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப் படுத்தி உள்ளனர்.

இரவு மற்றும் பகல் வேலைகளில் வனப்பகுதிகளில் அடிக்கடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாடினால், வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Tags : Thiruvilliputtur ,Megamalai Tigers Sanctuary , Srivilliputhur, Meghamalai Tiger Sanctuary, Increase in wildlife population
× RELATED திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில்...