×

இனி ஜில்லுனு ஓட்டலாம்; பஸ்சில் டிரைவர்களுக்கு பேட்டரி மின்விசிறி

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் சென்னை மாநகரப் பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் மின்விசிறியை பொருத்தி வருகிறது. கோடைகாலம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கமும் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை இருக்கிறது. குறிப்பாக வாகனங்களில் வெளியே செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் பகல் நேரங்களில் பேருந்துகளை இயக்குவது கடும் சவாலாக உள்ளது. இந்த நிலையில், வெயில் பாதிப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக மாநகர பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஓட்டுநரின் இருக்கையின் அருகே பேட்டரியால் இயங்கும் மின்விசிறி அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 1,000 பேருந்துகளில் மின்விசிறி பொருத்த திட்டமிடப்பட்டு தற்போது 250 பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன’’ என்றனர்.

The post இனி ஜில்லுனு ஓட்டலாம்; பஸ்சில் டிரைவர்களுக்கு பேட்டரி மின்விசிறி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Kathri ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...