×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கடைகளில் 35 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 300க்கும்  மேற்பட்ட கடைகள் உள்ளன.  இங்கு  பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதால் பேரூராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வந்தது. இந்நிலையில், பிளாஸ்டிக்  பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் எனவும்,  அவ்வாறு பயன் படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மண்டல  பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோர்  உத்தரவிட்டிருந்தனர்.

அதன்பேரில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி பொறுப்பு  செயல் அலுவலர் கலாதரன்  மேற்பார்வையில், கும்மிடிப்பூண்டி தூய்மை மேற்பார்வையாளர் குமார் தலைமையில், ஊத்துக்கோட்டை  தூய்மை மேற்பார்வையாளர் செலபதி மற்றும் ஊழியர்கள் இணைந்து நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பயன்படுத்தியது தெரியவந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட  கடைகளில் 35 கிலோ பிளாஸ்டிக்  பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.3600ஐ அதிகாரிகள் வசூலித்தனர்.


Tags : Uthukkotta Purrasi , 35 kg of plastic seized from shops in Uthukottai municipality
× RELATED திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்