வெள்ளத்தால் முடங்கிய பெங்களூரூ: ஐ.டி. நிறுவனங்கள் அவரச தேவைக்கு படகுகள் வாங்க திட்டம்..!!

பெங்களூரு: வெள்ளத்தால் முடங்கிய பெங்களூரை சேர்ந்த ஐ.டி. நிறுவனங்கள் அவரச தேவைக்கு படகுகள் வாங்க திட்டமிட்டுள்ளன. பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி இரவு முதல் பெய்த கனமழையால் பெங்களூரு மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நகரின் பல இடங்களில் விடிய விடிய பெய்த கனமழையால், பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பல மணிநேரம் காத்திருந்து வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் தங்கள் அலுவலகங்களுக்கு டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

வெள்ளத்தால் மூழ்கியிருந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தால் முடங்கிய பெங்களூரை சேர்ந்த ஐ.டி. நிறுவனங்கள் அவரச தேவைக்கு படகுகள் வாங்க திட்டமிட்டுள்ளன. பெங்களூருவில் வெளிவட்ட சாலையில் அமைந்துள்ள அமெரிக்க நிதி சேவைகள் நிறுவனம் ஏற்கனவே ரப்பர் படகுகளை வாங்கிவிட்டது. பெங்களூரில் பெய்த மழையால் வெளிவட்ட சாலையில் வெள்ளம் ஓடியதால் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியவில்லை. ஊழியர்களை அலுவலகம் அழைத்துவர காற்றடித்து பயன்படுத்தக்கூடிய ரப்பர் படகை அமெரிக்கா பயன்படுத்தியது.

அமெரிக்க நிதி சேவை நிறுவனம் தன் ஊழியர்களின் குடும்பத்தை வெள்ளத்திலிருந்து மீட்க ரப்பர் படகுகளை பயன்படுத்தியது. பெரு வெள்ளத்தால் மைக்ரோசாஃப்ட், இன்டெல், மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணி பாதிக்கப்பட்டது. 17 கி.மீ. நீளமுள்ள பெங்களூரு வெளிவட்ட சாலையில் உள்ள நிறுவனங்களில் மட்டுமே 10 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். பெங்களூரு வெளி வட்டசாலை வெள்ளத்தில் மிதந்ததால் பல நூறு நிறுவனங்களில் ஊழியர்கள் வராமல் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் படகு வாங்க தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: