×

புதிய பிரதமர் லிஸ் அறிவிப்பு இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இங்கிலாந்தில் அமைச்சர் பதவி: தமிழக தாய்க்கு பிறந்தவர்

லண்டன்: இங்கிலாந்து உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் வழக்கறிஞர் சுயெல்லா பிராவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தாயார் தமிழகத்தை சேர்ந்தவர்.
இங்கிலாந்தின் புதிய பிரதமாராக நேற்று முன்தினம் லிஸ் டிரஸ் தேர்வு ெசய்யப்பட்டார். இதையடுத்து, அவர் தனது புதிய அமைச்சரவையை உருவாக்கி வருகிறார். லிஸ் பிரதமராக அறிவிக்கப்பட்டதும், முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதி படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுயெல்லா பிராவர்மேனை (42) பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுயெல்லா, போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வந்தார். 2 குழந்தைகளின் தாயான இவர், தமிழ்நாட்டை சேர்ந்த தாய் உமா, கோவாவை சேர்ந்த தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் ஆகியோரின் மகள் ஆவார். இவர் புத்தரின் வாசகங்கள் அடங்கிய ‘தம்மபத’ நூலின் மீது நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Liz ,UK ,Tamil , New Prime Minister Liz Announces Indian-Origin Ministerial Position in UK: Born to Tamil Nadu Mother
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்