×

டிரைவர், கண்டக்டர் பணியை ஒருவரே செய்தால் அரசு விரைவு பேருந்து வேலைவாய்ப்பில் முன்னுரிமை: போக்குவரத்துத்துறை திட்டம்

சென்னை: பணியாளர்கள் தேர்வின் போது ஒரே சமயத்தில் ஓட்டுநர், நடத்துனர் என இரு பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய நபர்களை (டி&சி பணியாளர்கள்) பணியில் சேர்க்க முக்கியத்துவம் அளிக்க உள்ளதாக போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத்துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் விரைவில் பணி ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களினால் விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இருப்பினும் சேவையில் எவ்விதமான பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் நியமனத்தை  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் குறித்த விவரம் சேகரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்த பிறகு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதில் பணியாளர்கள் தேர்வின்போது ஒருவரே ஓட்டுநர், நடத்துனர் என இரு பணிகளையும் மேற்கொள்ளும் தகுதி உள்ள பணியாளர்களுக்கு (டி&சி பணியாளர்கள்) முக்கியத்துவம் அளிக்க  போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை உயரிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என இரு பணிகளையும் சேர்ந்து பார்க்க்கூடிய பணியாளர்களை அதிக அளவில் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Priority in Government Express Bus Employment if Driver and Conductor work alone: Transport Department Scheme
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...