×

தோகைமலை பகுதியில் கிணற்று, ஆற்றுப்பாசனத்தில் சம்பாசாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மற்றும் ஆற்றுப் பாசனங்களில் சம்பா சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தோகைமலை ஒன்றியங்களில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வடசோி, ஆலத்தூர், பாதிரிபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது.

ஆண்டுகள் தோறும் பருவ மழை பெய்து வந்தால் மேற்படி பகுதிகளில் விவசாயம் செழித்து இப்பகுதி விவசாய குடும்பங்களும், கூலி தொழிலாளர்களும் எப்போதும் பரபரப்பாக காணப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைவால் ஆற்றுப்பாசனம், கிணறு மற்றும் குளத்து பாசனங்கள் குறைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பருவமழை தொடங்கியதால் காவிhpக்கு நீர்வரத்தும் வர தொடங்கி உள்ளது. மேலும் கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் விதை நெல் தெளித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு டிகேஎம்-13, பிபிடி-5204, சிஆர்-1009, சிஓ-51, சிஓ-52, ஆகிய நெல் ரகங்களின் விதைகளை வேளாண்மைதுறை பெற்று நெற்களை தெளித்து வருகின்றனர். புரட்டாசி மாதம் இறுதிக்குள் 15 அல்லது 20 நாள் பயிர்களை நடவு செய்தால் கொலநோய், யானைக்கொம்பான், இழைசுருட்டு போன்ற நோய்கள் தாக்காது என விவசாயிகள் கூறுகின்றனர். பருவம் தவறி 30 நாள் பயிர்களை (புரட்டாசி மாதத்திற்கு பிறகு) வயல்களில் நடவு செய்தால் மேற்கண்ட நோய்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், மேலும் வளர்ந்த பயிhpல் கொப்பறை அதாவது (பூக்கிற தருவாய்) பனிகாலங்களில் ஏற்படும். இப்படி ஏற்பட்டால் நோய்தாக்கி மகசு+ல் குறையும் என்றும் கூறுகின்றனர்.

இதனால் சூரியன் ஒலி அடித்தூரில் படும் வகையில் இடைவெளி விட்டு பயிர்களை நட்டால் புகையான் என்னும் நோயை தவிர்க்கலாம் எனவும் வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். 120 நாட்களில் மகசூல் அடையும் இந்த வகை நெல் விதைகளை விவசாயிகள் வேளாண்மை துறைகளில் மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது தோகைமலை பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக நெல் விதைகளை தெளித்து நாற்று விடுவது, வயல்களை தயார்செய்வது போன்ற பல்வேறு பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

Tags : Thoghaimalai , Thokaimalai: Works for samba cultivation in well irrigation and river irrigation in Thokaimalai areas of Karur district.
× RELATED தோகைமலை அருகே வெள்ளாடு ,செம்மறி ஆடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்