ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு; கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் மறுசீரமைப்பு விவரங்களை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம்  மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி மற்றும்  ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் மறுசீரமைப்பு விவரங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் 29.8.2022 அன்று செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் பாகம் எண்.264 மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் பாகம் எண்.129ம் 1500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டது.

இதில், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் பாகம் எண்.129 இரண்டாக பிரிக்கப்பட்டு பாகம் எண்.128 மற்றும் 129ஆக 1500 வாக்காளர்களுக்குள் வரையறை செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி  பாகம் எண்.264 பிரிக்கப்பட்டு பாகம் எண்.265 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்படி, சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை 8.9.2022 முதல் மற்றும் அனைத்து கட்சி கூட்டத்தின் போதும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரில் வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: