திருவள்ளூர் அருகே 2200 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்; ஒருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 2200 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் தலைமை காவலர்கள் ரகு, மகேஷ் ஆகியோர் மாவட்ட எஸ்பி சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் புட்லூர் அம்மன் கோயில், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புட்லூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் தான் வைத்திருந்த பெரிய பையுடன் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் வைத்திருந்த பெரிய பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் 2200 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை  போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த மதுரை (68) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: