×

இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ் டிரஸ் நியமனம்: ராணி எலிசபெத் வாழ்த்து

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடந்தது. இறுதி வாக்கெடுப்பில், இந்திய வம்சாவளியும், முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக், 60,399 வாக்குகளும், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் 81,326 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராகவும், நாட்டின் புதிய பிரதமராகவும் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் நேற்று தனது பதவியிலிருந்து விலகினார். லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர், ஸ்காட்லாந்து பால்மோரல் அரண்மனையில் 96 வயதான ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக டிரஸை நியமித்து ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ராணி எலிசபெத்தை நேரில் சந்தித்த டிரஸ் வாழ்த்து பெற்றார். அப்போது டிரஸ் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க ராணி முறைப்படி வலியுறுத்தினார். ராணி எலிசபெத் வாழ்நாளில் பதவியேற்கும் 15வது இங்கிலாந்து பிரதமர் டிரஸ்.

* அமைச்சர் ராஜினாமா
இங்கிலாந்து தேர்தலில் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து உள்துறை அமைச்சர் இந்திய வம்சாவளியான பிரதி படேல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Tags : Liz Truss ,UK ,Queen Elizabeth , Liz Truss appointed as UK's new Prime Minister: Queen Elizabeth congratulates
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்