×

மலைச்சாரல் கவியரங்கம்

ஊட்டி :  நீலகிரி  மாவட்ட தமிழ் கவிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் கவியரங்கம்  நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 491-வது மலைச்சாரல் கவியரங்கம்  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்தது. கவியரங்கிற்கு மன்ற செயலாளர்  பிரபு முன்னிலை வகித்தார். தலைவர் பெள்ளி தலைமை வகித்தார். இக்கவியரங்கில்  புதிய கவிதை புத்தகங்கள் வெளியிடுவது, மன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை  சேர்ப்பதுடன், இளம் கவிஞர்களை ஊக்குவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு  திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அடுத்து வர உள்ள கவிதை  புத்தகத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கவிதைகள்  அளித்திட வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டது. தொடர்ந்து பங்கேற்ற  கவிஞர்கள் தங்களது படைப்புகளை வாசித்தனர். இதில் ஜனார்த்தனன், அமுதவள்ளி,  சுந்தரபாண்டியன், மணி அர்ஜூணன், சோலூர் கணேசன், நீலமலை ஜேபி., கவிஞர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். மயில்வாகனம் நன்றி கூறினார்.

Tags : Malacharal Poetry Hall , Ooty: The Nilgiri District Tamil Poets Association organizes a poetry gala every month. As part of this, the 491st Mountain Range
× RELATED மாமல்லபுரம் கடற்கரை பகுதியில்...