×

கலைவாணர் அரங்கத்தில் நவீன தொழில்நுட்பத்தில் ‘கப்பலோட்டிய தமிழன்’

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகழுக்கு, மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில் 14 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதை தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து, அவரது 151-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று திரையிடப்பட்டது.

Tags : Kalaivanar Arena , 'Kapalotiya Tamilan' in modern technology at Kalaivanar Arena
× RELATED மக்களிடம் செல்; மக்களோடு வாழ்;...