ரஷ்ய தூதரகத்தை குறிவைத்து காபூலில் குண்டு வெடிப்பு: ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே தற்கொலை படை தீவிரவாதி நடத்திய குண்டு வெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் நுழைவாயில் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் இரண்டு ரஷ்ய தூதரக ஊழியர்கள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர் தற்கொலை படையை சேர்ந்தவராக இருக்கலாம். மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது தூதரகம் முன்பு விசாவிற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் குண்டு வெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.