×

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ‘ராட்டினம்’ விபத்தில் 15 பேர் படுகாயம்: 5 பேர் கவலைக்கிடம்; பஞ்சாபில் சோகம்

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ராட்டினம் விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த திருவிழாவின் போது உயரமான ராட்டினம் மின் விளக்குகளால் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு ராட்டினம் விளையாட்டு நடைபெற்ற போது மேலே சென்ற ராட்டினம் திடீரென கீழே வேகமாக இறங்கிய போது அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதனால் அந்த ராட்டினத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். படுகாயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ெமாத்தம் 15 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்பதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து ெதாடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பாதுகாப்பு முறைகளை முறையாக பின்பற்றாமல் ராட்டினத்திற்கு அனுமதி அளித்ததாகவும், அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு மேலாக ராட்டினம் இயக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர். இச்சம்பவம் தொடர்பாக ராட்டினம் உரிமையாளர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ratinam ,Punjab , 15 injured in 'Ratinam' accident, decorated with electric lights: 5 critical; Tragedy in Punjab
× RELATED பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக...