அதிமுகவில் ஒற்றுமை என டிவிட்டர் பதிவு சசிகலா கருத்து காலம் கடந்தது: முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி

மதுரை: அதிமுகவில் ஒற்றுமை என டிவிட்டரில் சசிகலா பதிவிட்டுள்ளது காலம் கடந்த கருத்து என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது நூறு சதவீதம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்குப்பின் எடப்பாடி பழனிசாமிக்கு பல பணிகள், கடமைகள் உருவாகியுள்ளன. அதனை அவர் செவ்வனே செய்வார். அதிமுகவில் ‘ஒற்றுமை’ என டிவிட்டரில் சசிகலா பதிவிட்டுள்ளார். அவரது பதிவு காலம் கடந்த கருத்தாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில், புதிய உற்சாகத்துடன் உழைக்க அதிமுக தொண்டர்கள் தயாராக உள்ளனர் என்றார்.

Related Stories: