×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் நடால், இகா ஸ்வியாடெக்

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடரான  யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான  போலந்தின்  21 வயதான இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் லாரன் டேவிசை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள்  நுழைந்தார்.

பெலாரசின் அரினா சபலென்கா, 6-0, 6-2 என பிரான்சின் கிளாராபுரலையும், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 5-7, 6-4, 6-3 என சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கையும், பெலாரசின் விக்டோரியா அசரென்கா, 6-3,6-0 என குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கையும் வீழ்த்தினர். ஸ்பெயினின் முகுருசா, 7-5, 3-6, 6-7 என செக்குடியரசின் பெட்ரோ கிவிடோவாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஆடவர் ஒற்றையரில், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 6-0,6-1,7-5 என பிரான்சின் ரிச்சர்ட்காஸ்டெக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.


Tags : Nadal ,Ika Sviatek ,US Open Tennis , US Open Tennis, Natal, Ika Sviatek
× RELATED இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்