×

குர்பாஸ் அதிரடியில் ஆப்கான் ரன் குவிப்பு

ஷார்ஜா: ஆசிய கோப்பை டி20 தொடரில், இலங்கை அணியுடன் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் 175 ரன் குவித்தது.ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. ஹஸ்ரதுல்லா, குர்பாஸ் இருவரும் ஆப்கான் இன்னிங்சை தொடங்கினர். ஹஸ்ரதுல்லா 13 ரன்னில் வெளியேற, குர்பாஸ் - இப்ராகிம் ஸத்ரன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 93 ரன் சேர்த்தது.

22 பந்தில் அரை சதம் அடித்து அசத்திய குர்பாஸ் 84 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். இப்ராகிம் 40 ரன், நஜிபுல்லா 17, கேப்டன் முகமது நபி 1, ரஷித் கான் 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது. இலங்கை பந்துவீச்சில் மதுஷங்கா 2, அசிதா, தீக்‌ஷனா தலா 1
 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

Tags : Gurbaz , Afghan run accumulation in Gurbaz action
× RELATED குர்பாஸ் அதிரடி சதம்