நீங்கள் ஒட்டுண்ணி திரும்பி செல்லுங்கள்; போலந்திலும் இந்தியர் மீது இனவெறி

லண்டன்: அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கடந்த சில நாட்களாக இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், போலந்து நாட்டிலும் இந்தியர் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில் தன்னை அமெரிக்கர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நபர், இந்தியரை பார்த்து, ‘இங்கே நிறைய இந்திய இளைஞர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் போலந்தில் இருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லக் கூடாது? உங்கள் நாட்டு மக்கள் ஏன் எங்கள் நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள்? உங்களுக்கு இந்தியா இருக்கிறது.

நீங்கள் ஏன் வெள்ளையின மக்களின் நாட்டுக்கு வருகிறீர்கள்? நீங்கள் ஏன் உங்கள் நாட்டை கட்டமைக்க கூடாது? நீங்கள் ஏன் ஒட்டுண்ணிகளாக இருக்கிறீர்கள்? நீங்கள் எங்கள் இனத்தை இழிவுபடுத்துகிறீர்கள். திரும்பி செல்லுங்கள்.  ஐரோப்பாவில் நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. போலந்து நாடு, போலந்து மக்களுக்கு மட்டும் தான். நீங்கள் போலந்தை சேர்ந்தவர்கள் இல்லை... என்று சரமாரியாக திட்டி அவமதிக்கிறார். இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்போது நடந்தது. பாதிக்கப்பட்டது யார் என்பது உள்ளிட்ட எந்த விவரமும் சரியாக தெரியவில்லை.

Related Stories: