×

10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்க இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு: வாரியம் அறிவிப்பு

சென்னை: வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்க இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தாளில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் எனும் நிலை இருந்தது. தற்போது அந்நிலை மாற்றப்பட்டு ஆயுள் முழுவதும் சான்றிதழ் செல்லும் என்ற நிலை உள்ளது.இந்நிலையில் இந்தாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. ஆனால், அந்த தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. தொடர்ந்து, வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. தற்போது, இந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1க்கான தேர்வு வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 ஒத்திவைக்கப்படுகிறது என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Postponement of Teacher Eligibility Test which was to be held from 10th to 15th: Board Notification
× RELATED கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து...