×

5ம் தேதி பிறந்தநாள்: வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: வ.உ.சிதம்பரனார் சிலைக்கு நாளை (5ம் தேதி) முன்னிட்டு  முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்த நாளினை முன்னிட்டு சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள அவரின் உருவச்சிலைக்கு வரும் 5ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

மேலும் சென்னை, கலைவாணர் அரங்கில் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கும், 6ம் தேதி காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கும் என 2 காட்சிகளாக நவீன முறையில் திரையிடப்பட உள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MU ,Chidambaranar , 5th Birthday: MU Chidambaranar's tribute to MU Chidambaranar statue
× RELATED தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50...