×

கோட்டக்கரையில் நடைபெற்றது கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்; பல்வேறு குறைகள் குறித்து விவாதம்

கும்மிடிப்பூண்டி: கோட்டக்கரை பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வே தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் கோட்டக்கரை பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய குழுத் துணைத் தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் ரோஜா ரமேஷ், இந்திரா திருமலை, மதன்மோகன், ஜெயச்சந்திரன், அமலா சரவணன், மெய்யழகன், உஷா, கௌரி ஹரிதாஸ், ஜெயந்தி கெஜா, ரேவதி, மணிமேகலை கேசவன், சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பகுதியில் நடைபெற்ற பணிகள், அலுவலக வரவு செலவு கணக்குகளை வசித்தார். பின்னர் சிறுபுழல்பேட்டை கம்யூனிஸ்ட் ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் பொன்னேரி இருந்து ஜி39 அரசு பேருந்து புதுகும்மிடிப்பூண்டி, சிறுபுழல்பேட்டை இயக்கி வந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டது.
அதனை மீண்டும் கண்ட பகுதி வழியாக பேருந்து இயக்க வேண்டும் என பேசினார்.

அதேபோல் குருத்தானமேடு ஒன்றிய கவுன்சிலர் ஜோதி பன்பாக்கம் ஊராட்சியில் ஆங்காங்கே குரங்குகள் அதிகமாக இருப்பதாலும், பல பகுதிகளில் நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தி வருகிறது. இதனை உடனடியாக வனத்துறை அதிகாரிகள் பிடிக்க வேண்டுமென பேசினார். மேற்கண்ட அனைத்து கவுன்சிலர்களும் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளது இந்த தொழிற்சாலைகள் கிராம வளர்ச்சிக்காக சி.எஸ்.ஆர் ஆக்டிவிட்டி என்ற வளர்ச்சி திட்டத்தில் எந்த பணியும் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் அந்தந்த ஊராட்சிகளில் வளர்ச்சி அடையவில்லை ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், பிடிஒ வாசுதேவன் ஆகியோரிடம் எடுத்து உரைத்தனர். இதற்கு அதிகாரிகள் உடனடியாக எந்தெந்த தொழிற்சாலை என கண்டறிந்து அந்த தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

Tags : Gummipundi Union Councillors Meeting ,Kottakaram , Kummidipoondi union councilors meeting held at Kottakarai; Discussion on various defects
× RELATED தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு...