×

தொடர்மழையால் நீர்வரத்து: சிறுமலை செயற்கை நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள குட்டி இளவரசி என்று அழைக்கப்படும் சிறுமலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறுமலையில் பல்லுயிர் பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சிறுமலை பழையூரில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

சுற்றுலா தளமாக விளங்கி வரும் சிறுமலைக்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறுமலைக்கு வந்து, செயற்கை நீர் வீழ்ச்சியில் ஆனந்தமாக குடும்பத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.

Tags : Surumalai , Inundation due to torrential rains: Tourists throng Surumalai artificial waterfall
× RELATED விளைச்சல் பாதிப்பு: திண்டுக்கலில் சௌவ் சௌவ் காய்கறி விலை உயர்வு