×

உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் 8-ம் இடம் பிடித்தார் இந்திய வீராங்கனை அபிக்ஷா

லிமா: பெருவில் நடைபெற்ற உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அபிக்ஷா பெர்னாண்டஸ் மகளிருக்கான 200 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில் 8-ம் இடம் பிடித்தாா். மேலும், உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்தப் பிரிவுக்கான ஹீட்ஸில் அபிக்ஷா 2 நிமிஷம் 18.18 விநாடிகளில் இலக்கை எட்டி இந்தியா்களில் புதிய பெஸ்ட்டை பதிவு செய்தாா். அதன் பின், கடந்த ஜூன் மாதம் நடந்த போட்டியில் பந்தய துாரத்தை 2 நிமிடம், 18.39 வினாடியில் கடந்தது இவரது சிறந்த செயல்பாடாக இருந்தது.

அடுத்து நடந்த பைனலில் ஏமாற்றிய அபிக்ஷா, இலக்கை 2 நிமிடம், 19.14 வினாடியில் கடந்து, கடைசி இடமான 8வது இடம் பிடித்தார். இதனிடையே, ஆடவருக்கான 200 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ஹீட்ஸில் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். இதில் தகுதிச் சுற்றை தவறாக துவக்கிய அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்திய வீரர் சம்பவ் ராமா ராவ், தகுதிச் சுற்றில் 1 நிமிடம் 55.71 விநாடிகளில் இலக்கை எட்டி ஒட்டுமொத்தமாக 27வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.

Tags : World Junior Swimming Championships ,Abiksha , Junior Swimming Championship, Final, 8th Place, India's Abhiksha
× RELATED உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப்...