×

திருச்சியில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்: மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோவில் உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுவருகிறது.

அந்த வகையில், திருச்சியில் உள்ள பிரபலமான மலை கோட்டை கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறு வருகிறது. மலை கோட்டையின் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து 75 கிலோ கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்டது.

அதனை தொடந்து மலை கோட்டையின் உச்சியில் உள்ள உச்சி பிள்ளையாருக்கும் 75 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. சிவாசாரிகள் அந்த 75 கிலோ கொழுக்கட்டையை சுமந்து வந்து விநாயகருக்கு படைத்தனர்.

இதற்க்கு முன்னதாக மலை கோட்டை கோயிலில் உள்ள கோயில்யானை லட்சுமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பழங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான பக்த்தர்கள், விநாயகரை வழிபட்டு வந்தனர்.

இது தவிர திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் 1,300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர்  சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சிலைகள் 3-வது நாள் காவிரி ஆற்றில் கரைக்க படவுள்ளது. அதற்காக சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Vinayagar ,Chaturthi ,Ghal ,Trichy ,Kolukkatta , Vinayagar Chaturthi Kolagala Celebration: Malaikottai, Uchi Pilliyar, Kolukkatti Padayal
× RELATED புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில்...