கடலூர்: 8 மாதங்களுக்கு பிறகு கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

