×

சென்னை முதல் செங்கோட்டை வரை அறந்தாங்கி வழியாக ரயில் : கார்த்தி சிதம்பரம் எம்.பி கோரிக்கை

காரைக்குடி :  பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி கோரிக்கை ஏற்று சென்னை முதல் செங்கோட்டை வரை அறந்தாங்கி, மானாமதுரை வழியாக ரயில் இயக்கப்பட உள்ளது என தென்னக ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மீட்டர் கேஜ் பாதையாக இருக்கும் போது இயக்கப்பட்டது. அகல ரயில் பாதையாக மாற்றிய பின் இந்த ரயிலை மீண்டும் இயக்கவில்லை. இதனை அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை கடிதம் எழுத்தியிருந்தார்கள்.

இந்த கோரிக்கை ஏற்று தென்னக ரயில்வே பொது மேலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், கம்பன் விரைவு ரயிலுக்கு பதில் தற்போது சென்னை தாம்பரத்தில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, புதுவயல், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்கப்படும் எனவும், இந்த ஆண்டு ரயில்வே அட்டவணையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார். 


Tags : Chennai ,Chengkotta ,Kanthanki ,Karthi Chidambaram , Karaikudi, Aranthangi, Pattukkottai, Sengottai, Train, Karthi Chidambaram
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...