×

தி.நகரில் துப்பாக்கி முனையில் ரூ.4.50 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் பாலியல் தொந்தரவால் திட்டம் வகுத்து கொடுத்தேன்: கைதான தோல் மருத்துவர் அமிர்தா ஜூலியானா பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: தி.நகரில் ரூ.4.50 கோடி பணம் கேட்டு துப்பாக்கி முனையில் தொழிலதிபரை கடத்திய வழக்கில், கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான தோல் மருத்துவர் அமிர்தாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் தொழிலதிபரை கடத்த திட்டம் வகுத்து கொடுத்தாக பரபரப்பு  வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் சரவணன் (46). தொழிலதிபரான இவர், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 20ம் தேதி மாலை தொழிலதிபர் சரவணனை சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி 3 சொகுசு கார்கள், விலை உயர்ந்த பொருட்கள், பணத்துடன் கடத்தி சென்றுவிட்டதாக மாம்பலம் போலீசாருக்கு புகார் வந்தது.

புகாரின்படி, கூடுதல் கமிஷனர் பிரேம் ஆன்ந்த சின்ஹா உத்தரவுப்படி தொழிலதிபரை கடத்திய நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகள் மற்றும் தொழிலதிபர் வீட்டில் இருந்து எடுத்து சென்ற 3 சொகுசு கார்களின் உள்ள ஜிபிஎஸ் கருவிகள் மூலம் பின்தொடர்ந்து கடத்தப்பட்ட தொழிலதிபர் சரவணனை கார்களுடன் மாமல்லபுரம் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து தொழிலதிபரை பத்திரமாக மீட்டனர். தொழிலதிபரை கடத்தியதாக, மயிலாடுதுறை நீடூர் மாதா கோயில் தெருவை சேர்ந்த சவுடு மணல் ஒப்பந்ததாரர் ஆரோக்கியராஜ்(42), அவரது கார் ஓட்டுனர் அரவக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த் குரு(23), சென்னை பெருங்குடியில் வசிக்கும் பி.டெக் படித்து வரும் அரவக்குறிச்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் அப்ரோஸ்(23), மதுரை முத்தனம்பாளையம் சேவந்தாம்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் அஜய்(24), விஜயபாண்டி(25) மற்றும் கோவை மத்திய சிறையில் பணியாற்றும் சிறை காவலர் நாகேந்திரன்(31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் தொழிலதிபர் சரவணனிடம் இருந்து கடத்திய 3 சொகுசு கார்கள், ரூ.12 லட்சம் மதிப்புள்ள பெராரி வாட்ச், 9 செல்போன்கள், 2 நவீன கை துப்பாக்கிகள், 2 சுருள் கத்திகள், துப்பாக்கி தோட்டாக்கள், லேப்டாப், இரும்பு ராடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சவுடு மணல் வியாபாரி ஆரோக்கியராஜ் மற்றும் சிறை காவலர் நாகேந்திரன் உள்பட 6 பேரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபர் சரவணன் கடத்த கிழக்கு கடற்கரை சாலையில் மருத்துவமனை நடத்தி வரும் தோல் மருத்துவர் அமிர்தா ஜூலியானா என தெரியவந்தது.
கடத்தப்பட்ட சரவணன் சவுடு மணல் ஒப்பந்ததாரர் ஆரோக்கியராஜூக்கு மதுரை, தேனி மாவட்டங்களில் சவுடு மணல் எடுக்க அரசிடம் ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ.4.50 கோடி பணம் பெற்று ஏமாற்றியதால் இந்த கடத்தல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட ஆரோக்கியராஜ் அளித்த வாக்குமூலத்தின்படி தோல் மருத்துவர் அமிர்தா ஜூலியானா கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செல்பட்டது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்து வந்த அமிர்தா ஜூலியானாவை செல்போன் சிக்னல் வைத்து சென்னை புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். பின்னர் தனிப்படை போலீசார் அமிர்தா ஜூலியானாவிடம் மாம்பலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது மருத்துவர் அமிர்தா ஜூலியானா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: தோல் மருத்துவம் படித்த அமிர்தா ஜூலியானாவுக்கு மாடலிங்கிலும் ஆர்வம் உள்ளவர். இதனால் சில விளம்பரங்களிலும் அவர் மாடலிங்காக நடித்துள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் தனியாக மருத்துவமனை ஒன்றும் அவர் நடத்தி வருகிறார். டாக்டராக இருந்தாலும் மாடலிங்கில் அதிகம் ஈடுபடு இருந்ததால் பல தொழிலதிபர்களின் நட்பு கிடைத்துள்ளது.

இதனால் ஒவ்வொரு நாளும் தனக்கு செலவுகள் செய்யும் தொழிலதிபர்களுடன் இரவு நேர ‘பப்புக்கு’ செல்வதும், அவர்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை அமிர்தா ஜூலியான வாழ்ந்து வந்துள்ளார். அந்த வகையில் தான் டாக்டர் அமிர்தா ஜூலியானாவுக்கு தொழிலதிபர் சரவணன் பப்பில் அறிமுகமாகியுள்ளார். பெரிய பணக்கார குடும்பம் என்பதால் சரவணனுடன் தொடர் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். பிறகு அடிக்கடி அவரது வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். அந்த வகையில் தான் சரவணன் சகோதரர்கள் முத்துக்குமரன் மற்றும் பாலமுருகனுடன் அமிர்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அமிர்தாவின் பணம் பறிக்கும் செயல் சரவணனுக்கு தெரியவந்தது. உடனே சரவணன் உனக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்கிறேன். செலவுக்கு பணத்தை வாரி கொடுத்தும் ஏன் எனக்கு தெரியாமல் எனது சகோதரர்கள் உட்பட பல ஆண் நண்பர்களுடன் இரவு பப்புக்கு சென்று வருகிறாய் என கண்டித்துள்ளார். இதனால் அமிர்தாவுக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன் தன்னுடன் இருந்த போது எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை வைத்து அமிர்தாவை மிரட்டி என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் சரவணனை விட அவரது சகோதரன் பாலமுருகனுடன் யாருக்கும் தெரியாமல் ‘லிவிங் டூ கெதர்’ ஆக அமிர்தா தற்போது வாழ்ந்து வருகிறார். தன்னுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு தனது சகோதரனை மடக்கி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அமிர்தா மீது சரவணனுக்கு மேலும் கோபத்தை கூட்டியது. இதனால் தனது சொகுசு வாழ்க்கைக்கு தடையாக உள்ள தொழிலதிபர் சரவணனை பழிவாங்க வேண்டும் என்று அமிர்தா பல நாட்கள் திட்டமிட்டார். ஆனால் அவரால் நேரடியாக சரவணனை பழிவாங்க முடியவில்லை.

இதற்கிடையே இரவு பப்புக்கு செல்லும் போது, சவுடு மணல் ஒப்பந்ததாரர் ஆரோக்கியராஜை தொழிலதிபர் சரவணன் அமிர்தாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த பழக்கத்தில் சரவணனுக்கு தெரியாமல் ஆரோக்கியராஜூம் டாக்டர் அமிர்தாவுடன் பப்புக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஆரோக்கிய ராஜ் டாக்டர் அமிர்தாவின் அழகில் மயங்கி வைரங்கள் பதித்த விலை உயர்ந்த வாட்ச்கள், பரிசு பொருட்கள் என 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். அந்த நெருங்கிய நட்பால் தான், ஆரோக்கியராஜ் தொழிலதிபர் சரவணனிடம் கொடுத்த ரூ.4.5 கோடி பணத்தை திரும்ப வாங்குவது எப்படி என்று டாக்டர் அமிர்தாவிடம் யோசனை கேட்டுள்ளார். பாலமுருகனுடன் தற்போது லிவிங் டூ கெதராக இருப்பதால் அமிர்தா தொழிலதிபர் சரவணனை கண்காணித்து அவர் தொடர்பான தகவகளை ஆரோக்கியராஜிடம் கூறியுள்ளார். அதோடு இல்லாமல் சரவணனை எப்படி கடத்த வேண்டும் என்று கூறி அதற்கான திட்டங்களை அமிர்தாவே வகுத்து கொடுத்துள்ளார்.

சரவணனிடம் சென்று அமிர்தா ரகசியமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசாட்டில் சந்திக்க விரும்புவதாக சொன்னாலே, அவர் வந்துவிடுவார். ஏன் என்றால் சரவணனுக்கு பணம் மற்றும் அழகான பெண்கள் என்றாலே எந்த வேலையாக இருந்தாலும் வந்துவிடுவார். அதுவும் நான் அவருக்கு ’ஸ்பெஷல்’ என்னை சரவணனுக்கு ரொம்ப பிடிக்கும். எனவே நான் கூறியதாக ரிசாட்டுக்கு அழைத்து வந்து திட்டப்படி நீங்கள் சரவணனை கடத்தி அவரது சகோதரன் முத்துக்குமாரனுக்கு போன் செய்து பணத்தை மிரட்டி வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி ஆரோக்கியராஜை அனுப்பியுள்ளார். டாக்டர் அமிர்தாவின் திட்டப்படி ஆரோக்கியராஜ் கடந்த 20ம் தேதி சரவணனை தனது நண்பர்களுடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் கடத்தினார்.

அமிர்தா கூறிய திட்டத்தை முறையாக பின் பற்றாமல் முன்கோபத்தால் துப்பாக்கி முனையில் சரவணனை கடத்தியதால் அனைவரும் போலீசாரிடம் மாட்டி கொண்டனர். திட்டத்தை வகுத்து கொடுத்தது நான் தான் என்று ஆரோக்கியராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து என்னையும் இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டார். அன்று மது போதையில் நான் கூறிய திட்டத்தை செயல்படுத்தி டாக்டரான என்னை பெரிய சிக்கலில் ஆரோக்கியராஜ் மாட்டிவிட்டுவிட்டார். இவ்வாறு அமிர்தா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : D. Nagar ,Amirtha Juliana , Arrested Dermatologist Amrita Juliana, who asked for Rs 4.50 crore at gunpoint and arranged a plan to kidnap a businessman due to sexual harassment: sensational confession
× RELATED அடுத்த பிரதமரை கைகாட்டும் கிங்...