பந்தலூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளை சார்பில் அருகிலேயே ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பணம் எடுக்க சென்றவர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு காவல்துறை மற்றும் வங்கி கிளை மேலாளருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சேரம்பாடி  போலீசார் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை யாரோ மர்ம நர்கள் எடுக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால், பணம் எதுவும் எடுக்கவில்லை. இதனால், ஏடிஎம்மில் இருந்த ரூ.29 லட்சம் தப்பியது என்று போலீசார் தெரிவித்தனர். கொள்ளை முயற்சி நடந்த போது ஏடிஎம் மையத்தில் கண்காணிப்பு கேமரா இயங்காமல் இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கிளை மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: