×

மீண்டும் காமெடியன் ஆகிறார் சந்தானம்

சென்னை: ஹீரோவில் இருந்து மீண்டும் காமெடியனாக நடிக்க திட்டமிட்டு இருக்கிறார், சந்தானம்.பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த சந்தானம், திடீரென்று ஹீரோ ஆனார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘ஏ ஒன்’, ‘தில்லுக்கு துட்டு’, ‘குலு குலு’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில். இப்போது மீண்டும் அவர் காமெடியனாக நடிக்க சம்மதித்துள்ளார்.தற்போது ஆர்யா  நடித் துள்ள ‘கேப் டன்’  என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய சந்தானம், ‘ஆர்யா எனக்கு போன் செய்து, என்ன செய்கிறாய் என்றார். வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் என்றேன்.

அப்படி என்றால் ‘கேப்டன்’ புரமோஷன் நிகழ்ச்சிக்கு வா. அங்கும் சும்மா இருந்தால் போதும் என்றார். வந்துவிட்டேன். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது’ என்றார்.‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆர்யா, சந்தானம் காமெடி காம்பினேஷன்தான் காரணமாக இருந்தது. அந்தவகையில் இதன் இரண்டாம் பாகத்தில் இருவரையும் மீண்டும் இணைத்து நடிக்க வைப்பதற்கு டைரக்டர் ராஜேஷ்.எம் முயற்சித்து வந்தார். அதற்கு பலன் கிடைத்துள்ளது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு சந்தானம் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இப்படத்தை எப்போது தொடங்குவார்கள் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Tags : Sandanam , Santhanam becomes a comedian again
× RELATED குண்டாசில் வாலிபர் கைது