×

சீன குட்டை வைரஸ் பஞ்சாப்பில் தாக்குதல்: நெற்பயிர் வளர்ச்சி பாதிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நெற்பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கக் கூடிய நெல் கருப்பு குட்டை வைரஸ் (எஸ்ஆர்பிஎஸ்டிவி) வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் கடந்த 2001ம் ஆண்டு தெற்கு சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இது, தற்போது பஞ்சாப் மாநிலம் முழுவதும் பரவியதோடு, அண்டை மாநிலங்களுக்கும் சென்றுள்ளது. இதனால், நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படுவதாக லூதியானாவின் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் சப்பிர் சிங் கோசல் கூறி உள்ளார். வளர்ச்சி குன்றிய நெற்பயிர்கள், வழக்கமான பயிர்களை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்த உயரத்தில் உள்ளன. இதன் வேர்கள் வலுவின்றி இருப்பதால், எளிதில் பிடுங்கிவிடலாம். மேலும், பாதிக்கப்பட்ட பயிர்கள் விரைவில் வாடி விடுவதால் விளைச்சல் குறைவாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றன.

Tags : Punjab , Chinese short virus attack in Punjab: Impact on rice growth
× RELATED 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்தியது பஞ்சாப்