×

சென்னை எழும்பூரில் கண் மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை : சென்னை எழும்பூரில் அரசு மருத்துவமனையின் 200-வது ஆண்டை ஒட்டி கண் மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். . 63.60 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் புதிய கட்டிடங்கள் திறந்து வைத்தார். சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் 195 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ கட்டிடங்கள், நவீன கருவிகள் மற்றும் மருத்துவ ஊர்திகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

குறிப்பாக, எழும்பூர் கண் மருத்துவமனையின் 200வது ஆண்டை கொண்டாடும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் 65.60 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனை வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த கட்டிடத்தில் உள்ள கல்வெட்டினையும் அவர் திறந்து வைத்தார். மேலும், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு 63.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்டார்.

குறிப்பாக, எழும்பூர் அரசு  குழந்தைகள் நல மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை, தாம்பரம் அரசு மருத்துவமனை, மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வென்டிலேட்டர்கள், அல்ட்ரா சவுண்ட் மெஷின்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை சம்பந்த பட்ட அதிகாரியிடம் அவர் வழங்குகிறார். மேலும், தமிழகத்தில் உள்ள 26 மின்கல ஊர்தியை சற்று நேரத்தில் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல பொதுசுகாதார மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பாக கருணை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப்பணி உதவியாளர்கள், மின்பணியாளர்கள் மொத்தம் 237 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணை வழங்கினார்.               


Tags : Chief Minister ,Eye Hospital ,Elmampur ,Chennai ,K. Stalin , Egmore, eye, hospital, building, opening, Stalin, opening
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...